/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உதவியாளர் பணிக்கு நாளை தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் வழக்கு
/
உதவியாளர் பணிக்கு நாளை தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் வழக்கு
உதவியாளர் பணிக்கு நாளை தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் வழக்கு
உதவியாளர் பணிக்கு நாளை தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் வழக்கு
ADDED : ஏப் 26, 2025 04:22 AM
புதுச்சேரி : அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 256 உதவியாளர் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நாளை 27ம் தேதி காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை நடக்கிறது. இத்தேர்வை 32 ஆயிரத்து 829 பேர் எழுத உள்ளனர்.
தேர்வர்கள், நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத முடியும். நுழைவு சீட்டில் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி சுய கையெழுத்திட்டு கொண்டு வரவேண்டும்.
உடன் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது பான்கார்டு இவற்றில் ஏதேனும் ஒன்றின் அசலை கொண்டு வர வேண்டும்.
தேர்வு மைய நுழைவு வாயில் காலை 9:30 மணிக்கு மூடப்படும். தேர்வர்களின் விரல் ரேகை பதிவு செய்த பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். எனவே, தேர்வர்கள், மையத்திற்கு முன்கூட்டியே வரவேண்டும்.
தேர்வறைக்கு நுழைவு சீட்டு, கருப்பு வண்ண பால்பாய்ண்ட் பேனா மற்றும் அசல் அடையாள அட்டை மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் ஜாமர் கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு இதுவரை நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடன டியாக https://recuitmenry.py.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது வழக்கு மற்றும் எதிர்கால தேர்வுகளில் பங்கேற்க தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விபரம் அல்லது உதவி தேவைப்படுவோர் அலுவலக நேரத்தில் 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் இன்று 26ம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா தெரிவித்துள்ளார்.

