ADDED : டிச 11, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி தேங்காய்த்திட்டு, பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்தவர் ராதாக்கிருஷ்ணன். அவரது மனைவி வனஜா, 65; இவரது மகன் முருகானந்தம், 50; ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த சோழன் என்பவரிடம் வனஜா பேசிக் கொண்டிருந்தார். வீட்டிற்குள் இருந்த மகன் முருகானந்தம், ஏன் வெளியாட்களை வீட்டிற்குள் வீட்டாய் என கேட்டு வனஜாவை திட்டியதுடன், கூர்மையான ஆயுதத்தால் நெற்றில் குத்தி கீழே தள்ளியதுடன், மீண்டும் வீட்டிற்குள் வந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக வனஜா அளித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் முருகானந்தம் மீது மிரட்டல் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

