/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுவாச மண்டலத்தை உறுதிப்படுத்தும் முறைகள்
/
சுவாச மண்டலத்தை உறுதிப்படுத்தும் முறைகள்
ADDED : ஆக 21, 2025 07:00 AM

ஹதேனாக்களின் மேல் மார்பு பகுதி சுவாசத்துடன் இணைந்த ஆத்யம் பிராணாயாமம் செயல்முறையை கடந்த வாரம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம், மேல் மார்பு (கழுத்துப்பட்டை) சுவாச பயிற்சியை பார்ப்போம்.
மேல்மார்பு சுவாசப் பயிற்சி மேல் மார்பு பகுதியில் உள்ள கழுத்துப்பட்டை மேல் கைகளை வைத்து கவனம் முழுவதும் மேல் மார்புப் பகுதியில் வைத்து நீண்டு சுவாசிக்கவும். 6 முறை சுவாசத்தை உள்ளிழுத்து விடவும். அடுத்து, கைகளை இடுப்பின் மேல் வைத்து, மேல் மார்பு பகுதியில் பக்கவாட்டாகிய அக்கிளுக்கு கீழ் உள்ள பகுதியில் கவனம் செலுத்தி 6 முறை சுவாசிக்கவும் (அக்கிளுக்கு கீழே கைகளை வைக்கக்கூடாது. காரணம், இருதயத்திற்கு செல்லும் நரம்புகள் அந்த நிலையில் துாண்டப்படுகிறது).
கை முட்டிகளை மேலே துாக்கி மேல் மார்பு பகுதியில் பின் பாகத்தில் கைகளை வைத்து 6 முறை சுவாசிக்கவும். நீண்டு சுவாசம் இழுத்து, காற்றானது மேல் மார்பு பகுதியில் முதலில் முன்பகுதி, அடுத்து பக்கவாட்டு, கடைசியாக பின்பகுதியில் நிரம்பும். சில வினாடிகளுக்கு மூச்சை அடக்கி வைத்து பின் வெளியேற்றும்போது, பின்பகுதி, பக்கவாட்டு, கடைசியாக முன்பகுதி என்ற வரிசையில் வெளியேற்ற வேண்டும். சில வினாடிகள் சுவாசத்தை நிறுத்தவும். இவ்வாறு 6 முதல் 9 முறை செய்யவும். இதுவே மேல்மார்பு அல்லது கழுத்துப்பட்டை சுவாச பயிற்சி ஆகும்.
மஹாத்யோகா பிராணாயாமம் செய்முறை பயிற்சியை அடுத்த வாரம் பார்ப்போம்...