/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., பிரமுகர் பிறந்த நாள் விழா
/
காங்., பிரமுகர் பிறந்த நாள் விழா
ADDED : ஆக 14, 2025 06:52 AM

புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதி காங்., பிரமுகர் பிரதீஷ் இருதயராஜ் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு காங்., மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
ராஜ்பவன் தொகுதி காங்., பிரமுகர் வழக்கறிஞர் பிரதீஷ் இருதயராஜ். இவரது 49வது பிறந்த நாள் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு எம்.வி.ஆர். மருத்துவமனை, ஈரம் கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சி நிறுவனம் சார்பில், துாய்மை பணியாளர்கள் மற்றும் ரிக்க்ஷா தொழிலாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம், நீடராஜப்பையர் வீதியில் நடந்தது.
முகாமை முன்னாள் எம்.எல்.ஏ., பாலாஜி, சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், காங்., வழக்கறிஞர் அணி தலைவர் மருது பாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ராஜ்பவன் தொகுதி துாய்மைப்பணியாளர்கள், ரிக்க்ஷா தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
பின், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் முன்னிலையில், வழக்கறிஞர் பிரதீஷ் இருதயராஜ் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.
தி.மு.க., அவைத்தலைவர் சிவக்குமார், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், பாலன், ரமா வைத்தியநாதன், விஜயகுமாரி, முன்னாள் கவுன்சிலர்கள் குமரன், ராஜலட்சுமி, மாநில பொது செயலாளர்கள் தனுசு, இளையராஜா, நிர்வாகிகள் முகமது ஹசன், காங்கேயன், வீரா, சேகர், ஜெயபால், திருவேங்கடம், ஆனந்தபாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை பிரதீஷ் இருதயராஜின் நண்பர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.