/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெட்ரோல் பங்கில் ரூ.42.59 லட்சம் கையாடல் பெண் கணக்காளர் உட்பட 3 பேர் கைது
/
பெட்ரோல் பங்கில் ரூ.42.59 லட்சம் கையாடல் பெண் கணக்காளர் உட்பட 3 பேர் கைது
பெட்ரோல் பங்கில் ரூ.42.59 லட்சம் கையாடல் பெண் கணக்காளர் உட்பட 3 பேர் கைது
பெட்ரோல் பங்கில் ரூ.42.59 லட்சம் கையாடல் பெண் கணக்காளர் உட்பட 3 பேர் கைது
ADDED : ஆக 14, 2025 12:09 PM
புதுச்சேரி: பெட்ரோல் பங்கில் ரூ. 42.59 லட்சம் கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்ட பெண் கணக்காளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம், விழுப்புர ம் மெயின் ரோட்டில் கே.கே.டி., ஏஜென்சி பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு, காராமணிக்குப்பம், மாரியம்மன் நகரை சேர்ந்த வசந்தி, கடந்த ஆண்டு டிச., 4ம் தேதி முதல் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவர், பெ ட்ரோல் பங்கின் வரவு- செலவு கணக்குகளை சரி பார்ப்பதும், பங்கில் வரும் வருமானத்தை வங்கி கணக்கில் செலுத்தும் பணி யை கவனித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக பெட்ரோல் பங்கிற்கு வரும் வருமான கணக்கு வரவு குறைவாக இருந்தது. சந்தேகமடைந்த பெட்ரோல் பங்க் மேலாளர் மகேந்திரகுமார், பங்கின் வருமானம் மற்றும் வங்கியின் கணக்கு பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது, முன்னுக்குப்பின் முரணாக இருந்தது.
பெட்ரோல் பங்கில் இருந்து வந்த வருமானத்தை வங்கி கணக்கில் செலுத்தும்போது, குறிப்பிட தொகையை கையாடல் செய்து, தனது கணவரான திருப்பாபுலியூரில் உள்ள புள்ளியியல் துறையில் பணிபுரியும் முகேஷ் வங்கி கணக்கில் வசந்தி செலுத்தி இருப்பது தெரியவந்தது.
இதுவரையில் பெட்ரோல் பங்க் வருமானத்தில், ரூ. 42 லட்சத்து 59 ஆயிரத்து 864 ரூபாய் கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து மகேந்திரகுமார் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் மோசடியில் ஈடுபட்ட கணக்காளர் வசந்தி, 32, உடந்தையாக இருந்த பங்க் ஊழியர் திருசிற்றம்பலத்தை சேர்ந்த பிரசாத், 28; நெல்லித்தோப்பு கார்த்திக், 38; ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.