ADDED : ஜன 26, 2026 04:28 AM

திருபுவனை: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் சார்பில் ஆத்மா திட்டத்தின் மூலம் தேனீ வளர்ப்பு குறித்த செயல்விளக்கம் திருபுவனையில் நடந்தது.
மதகடிப்பட்டு துணை வேளாண் இயக்குனர் ராஜ்குமார் வழிகாட்டுதலின்படி வேளாண் அலுவலர் நடராஜன் தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பில் தேனீக்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
முன்னதாக தேனீ பெட்டிகள் வழங்கவுள்ள விவசாயிக்கு காலாப்பட்டில் தேனீக்களை கையாளும் முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு ஆத்மா திட்டத்தின் மூலம் இரண்டு தேனீ வளர்ப்பு பெட்டிகள் விவசாயி மகேஸ்வரன் தோட்டத்தில் பொறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரியின் தோட்டக்கலைத்துறை இறுதியாண்டு மாணவர்கள் கலந்துகொண்டு செயல்முறை விளக்கத்தில் உதவி தேனீ வளர்ப்பின் சிறப்புகளை எடுத்துக் கூறினர் .
இதற்கான ஏற்பாடுகளை ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி செய்திருந்தார்.

