ADDED : மே 01, 2025 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மீனவரை போலீசார் கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை, வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் பூவரசன், 45; மீனவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார். கடந்த 20ம் தேதி அந்த பெண் வீட்டிற்கு சென்றபோது, அங்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீட்டில் தனியாக இருந்த அவரது மகளை பூவரசன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியின் தாய் புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த பூவரசனை சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

