/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 6 செ.மீ., மழை பதிவு
/
புதுச்சேரியில் 6 செ.மீ., மழை பதிவு
ADDED : டிச 14, 2024 03:36 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நேற்று, 6 செ.மீ., மழை பதிவானது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி கடந்த, 10,ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரை, 4.73 செ.மீ., மழை பதிவானது. நேற்று காலை 8:30 மணி முதல் 5:30 மணி வரை, 1.36 செ.மீ, மழை பதிவாகி இருந்தது. ஒட்டு மொத்தமாக நேற்று மாலை வரை, 6 செ.மீ., மழை பதிவானது.
இந்த மழை காரணமாக, தற்காலிக பஸ் நிலையம் சேறும், சகதியுமாக மாறியது.
இதனால் பயணிகள் பேருந்தில் ஏற முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதேபோல நேற்று கடல் அலைகள் சீற்றமாக இருந்ததால் போலீசார் சுற்றுலா பயணிகளை கடற்கரைக்கு செல்ல அனுமதிக்காமல் எச்சரித்து அனுப்பினர்.

