/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ஓசி' சிகரெட் கேட்டு வியாபாரியை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது
/
'ஓசி' சிகரெட் கேட்டு வியாபாரியை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது
'ஓசி' சிகரெட் கேட்டு வியாபாரியை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது
'ஓசி' சிகரெட் கேட்டு வியாபாரியை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது
ADDED : ஏப் 05, 2025 04:22 AM

புதுச்சேரி: கோரிமேட்டில் ஓசி சிகரெட் கேட்டு, டீ கடை வியாபாரியை கத்தியால் வெட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான கடப்பேரிக்குப்பத்தை சேர்ந்தவர் ஹரிஷ், 23; ஜிப்மர் மருத்துவமனை எதிரே டீ மற்றும் டிபன் கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் திலாஸ்பேட்டை, வீமன் நகரை சேர்ந்த வீரப்பன் மகன் சசிக்குமார், 24; குருமாம்பேட் ஆறுமுகம் மகன் கிருஷ்ணராஜ், 22; ஆகியோர் மதுபோதையில் ஹரிஷ், கடைக்கு சென்று ஓசியில் சிகரெட் கேட்டனர்.
இதற்கு, ஹரிஷ் பணம் கொடுக்காமல், முடியாது என கூறினார். ஆத்திரமடைந்த சசிக்குமார், மறைத்து வைத்திருந்த கத்தியால், ஹரிஷின் முகத்தில் வெட்டியும், கிருஷ்ணராஜ் கடையில் இருந்த சோடா பாட்டிலை எடுத்து, ஹரிஷின் தலையில் தாக்கியும் கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
படுகாயமடைந்த ஹரிஷ் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அவர், அளித்த புகாரின் பேரில், கோரிமேடு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, சசிக்குமார், கிருஷ்ணராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது அடிக்கடி, கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

