/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூன்றாம் நாளான நேற்று வேட்புமனு தாக்கல் இல்லை
/
மூன்றாம் நாளான நேற்று வேட்புமனு தாக்கல் இல்லை
ADDED : மார் 23, 2024 06:14 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் மூன்றாம் நாளான நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிக்கு லோக்சபா தேர்தல், மார்ச் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கியது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்காததால் முதல் நாள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இரண்டாம் நாளான நேற்று முன்தினம் சுயேச்சை வேட்பாளர் கூத்தன் (எ) தெய்வநீதி, 54; தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். மூன்றாம் நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இன்று 23 சனிக்கிழமை, நாளை 24ம் தேதி ஞாயிற்று கிழமை வேட்புமனுக்கள் பெறப்படாது.
பின், 25 முதல் 27 ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். 28 ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 30ம் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள்.

