/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என்.ஆர்.காங் - பா.ஜ., மீது வைத்திலிங்கம் தாக்கு
/
புதிய வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என்.ஆர்.காங் - பா.ஜ., மீது வைத்திலிங்கம் தாக்கு
புதிய வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என்.ஆர்.காங் - பா.ஜ., மீது வைத்திலிங்கம் தாக்கு
புதிய வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என்.ஆர்.காங் - பா.ஜ., மீது வைத்திலிங்கம் தாக்கு
ADDED : மார் 29, 2024 04:47 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் வேலை வாய்ப்பை உருவாக்க, என்.ஆர்., காங் - பா.ஜ., கூட்டணி அரசு, எந்த நடவடிக்கையும், மேற்கொள்ளவில்லை என, காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் குற்றம் சாட்டி உள்ளார்.
புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் நேற்று மாலை, மாநில புதுச்சேரியின் எல்லை மற்றும் சனி மூலையான, கனக செட்டி குளத்தில் உள்ள, பிள்ளையார் கோவிலில், வழிபாடு செய்து பிரசாரத்தை துவக்கினார்.
இதையடுத்து அவர் பேசியதாவது:
புதுச்சேரியில், பல்கலை, பொறியியல் கல்லுாரி, கால்நடை கல்லுாரி உள்ளிட்டவைகள் எல்லாம், காங்., ஆட்சியில் கொண்டு வரப்பட்டன. இங்குள்ள, மின்சாரத்துறையை தனியார் துறைக்கு விற்க, இங்குள்ள ஆளும் கூட்டணி தயாராகி கொண்டிருக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்டவைகளை விற்பதற்கு உண்டான நடவடிக்கையை, அவர்கள் மேற்கொண்டுள்ளனர். ஆனால், வேலைவாய்ப்பை உருவாக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அத்தியவசிய பொருட்களான அரிசி, உளுந்து, சமையல் எண்ணெய், பூண்டு, புளி உள்ளிட்ட அனைத்தின் விலையும் உச்சத்தை எட்டியுள்ளது.
இவற்றை குறைக்க பா.ஜ.,கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இண்டியா கூட்டணியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னின்று வழி நடத்தி கொண்டிருக்கிறார்.
அவர் தான், எங்கள் கூட்டணியின் முக்கிய தலைவர். உங்கள் கையில் உள்ள ஒவ்வொரு ஓட்டும், மிகப்பெரிய ஆயுதம். அனைவரும், இண்டியா கூட்டணிக்கு ஆதரவு தந்து, 'கை' சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரச்சாரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் ஷாஜஹான், இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம், எம்.எல்.ஏ.,க்கள், கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

