/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேட்பாளருக்கு வில்லனான 'வெயில்':பிரசாரத்தில் புலம்பும் தொண்டர்கள்
/
வேட்பாளருக்கு வில்லனான 'வெயில்':பிரசாரத்தில் புலம்பும் தொண்டர்கள்
வேட்பாளருக்கு வில்லனான 'வெயில்':பிரசாரத்தில் புலம்பும் தொண்டர்கள்
வேட்பாளருக்கு வில்லனான 'வெயில்':பிரசாரத்தில் புலம்பும் தொண்டர்கள்
ADDED : ஏப் 04, 2024 01:06 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கொதிக்கும் வெயில் அனைத்து கட்சிவேட்பாளர்களுக்கும் வில்லனாக மாறி உள்ளது.
புதுச்சேரியில்யில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கிவிட்டது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் பிரசாரத்தை துவக்கி விட்டனர். ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களுடன் தொகுதி வாரியாக திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.
புதுச்சேரியில் 23, காரைக்காலில் 5, மாகி, ஏனாமில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வேட்பாளரும் 10க்கும் குறைவான தொகுதிகளுக்கு நேரடியாக சென்று பிரசாரம் செய்து முடித்துள்ளனர்.
வரும் 17ம் தேதி பிரசாரம் முடிகிறது. பிரசாரத்திற்கு 13நாட்கள் மட்டுமே உள்ளது. அதற்குள் அனைத்து தொகுதிக்கு செல்ல முடியாது. இதனால், ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு தொகுதி, மாலையில் ஒரு தொகுதி என பிரசாரம் செய்கின்றனர்.
வழக்கமாக ஏப்., மே மாதம் கோடை வெயில் அதிகமாக இருக்கும். இந்த முறை பிப்., மாதத்தில் துவக்கத்திலே வெயில் வாட்டி வதைக்க ஆரம்பித்து விட்டது. தற்போது அக்னி நட்சத்திர வெயில் போல் உக்கிரமாக உள்ளது.
காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயில் அதிகமாக உள்ளது.இந்த நேரத்தில் பிரசாரம் செய்ய செல்லும் தலைவர்கள், பைக்கில் உலா வரும் தொண்டர்களும் தலை சுற்றி மயக்கம் அடையும் அளவுக்கு ஆளாகின்றனர்.
அதுபோல் ஒவ்வொரு தேர்தல் பிரசாரஇடத்தில் காத்திருக்கும் அப்பகுதி மக்களும் வெயில் தாங்க முடியாமல் தவிக்கின்றனர். மீதி பிரசார நாட்கள் எப்படி கடத்த போகிறோம் என கட்சி தொண்டர்கள் புலம்பி வருகின்றனர். ஆக மொத்தம், அனைத்து வேட்பாளர்களுக்கும், வெயில் வில்லமான மாறிவிட்டது.

