/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுப்பிக்கப்பட்ட சோதனைச் சாவடி: எஸ்.பி., ராஜாராம் திறப்பு
/
புதுப்பிக்கப்பட்ட சோதனைச் சாவடி: எஸ்.பி., ராஜாராம் திறப்பு
புதுப்பிக்கப்பட்ட சோதனைச் சாவடி: எஸ்.பி., ராஜாராம் திறப்பு
புதுப்பிக்கப்பட்ட சோதனைச் சாவடி: எஸ்.பி., ராஜாராம் திறப்பு
ADDED : மார் 28, 2024 04:33 AM

புதுச்சேரி : கடலுாரில், புதுப்பிக்கப்பட்ட சோதனைச் சாவடி கட்டடத்தை, எஸ்.பி., ராஜாராம் திறந்து வைத்தார்.
கடலுார், செம்மண்டலம் நான்குமுனை சந்திப்பில், ஆனந்தம் சில்க்ஸ் நிறுவனம் மூலம், சோதனைச் சாவடி கட்டடம் புதுப்பிக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள், ஒலி பெருக்கிகள் அமைத்து, தாவரங்கள் நட்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கட்டடத்தை, எஸ்.பி., ராஜாராம், ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, போக்குவரத்து போலீசாருக்கு, 'பேட்டன் லைட்'டுகளை வழங்கினார். டி.எஸ்.பி., பிரபு முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், தலைமை காவலர் ஜோதிலிங்கம், ஆனந்தம் சில்க்ஸ் மேலாளர்கள் பாலாஜி, ஆயுதவிஜயன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.