ADDED : மார் 23, 2024 11:40 PM
: புதுச்சேரி லோக்சபா தேர்தலிலில் முதல் 16 மையங்களில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடந்தது.
மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் குலோத்துங்கன், புதுச்சேரி மாநிலக் கூட்டுறவு வங்கி, ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மூலக்குளம் கிறிஸ்ட் கல்லுாரி ஆகிய தேர்தல் மையங்களில் நடந்த பயிற்சியைப் பார்வையிட்டு, வாக்குப்பதிவை திறம்பட நடத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது, தேர்வு செய்யப்பட்ட ஓட்டுச்சாவடி அதிகாரிகள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வது கட்டாயமாகும். அவ்வாறு கலந்துகொள்ளாதவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 ன்படி சட்டப்பூர்வமான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

