/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'நற்பணி செய்தவர்கள் நாட்டுப்பணி செய்யுங்கள்'
/
'நற்பணி செய்தவர்கள் நாட்டுப்பணி செய்யுங்கள்'
ADDED : ஏப் 04, 2024 01:07 AM
புதுச்சேரி: 'இது குடியுரிமையை தற்காத்துக்கொள்ளும் நேரம்' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி விமான நிலையத்தில்அவர் அளித்த பேட்டி:
இந்த லோக்சபா தேர்தலை பொருத்தவரை, நானும் மக்களில் ஒருவன் என்பதால், என் மனநிலை தான் அவர்களுக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
மாற்றம் என்பதல்ல, இப்போது முக்கியம். நம்முடைய குடியுரிமை, அரசியலமைப்பு உள்ளிட்ட எல்லாவற்றையும், தற்காத்து கொள்ளும் நேரம் இது.
கட்சி என்கிற வரையறை கோடுகளை எல்லாம் கடந்து இங்கு வந்திருக்கிறேன். இந்தியன் என்பதும், தமிழன் என்பதும் தான் இன்று எனக்கு பிரதானமாக தெரிகிறது. நற்பணி செய்தவர்கள் அனைவரும் இன்று நாட்டுப்பணி செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

