நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: மண்டகப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த மிட்டா மண்டகப்பட்டு கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 14 ம் தேதி துவங்கியது.
தினமும் காலை அம்மனுக்கு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு அர்ஜூணன் - திரவுபதி திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. முன்னதாக மாலை மாற்றுதல், கன்னிகாதானம், மாங்கல்ய தாரணம், மகாதீபாரதனை நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று மாலை தீமிதி திருவிழா நடக்கிறது.

