நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அருகே உள்ள ஆயர்குளம் பகுதியில் பிரசித்திப்பெற்ற நாகமுத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகள் நடந்தது.
காலை10.00 மணிக்குஅம்மனுக்கு 108 பால்குடம் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. மாலை 6.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. உற்சவத்தில் நெட்டப்பாக்கம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நுாற்றுாக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

