/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் 26 பேர் போட்டி வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியீடு
/
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் 26 பேர் போட்டி வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியீடு
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் 26 பேர் போட்டி வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியீடு
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் 26 பேர் போட்டி வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியீடு
ADDED : மார் 31, 2024 05:37 AM
புதுச்சேரி : புதுச்சேரி லோக்சபா தேர்தலில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஏழு அரசியல் கட்சி வேட்பாளர்கள், 19 சுயேச்சைகள் என மொத்தம் 26 பேர் போட்டியிடுகின்றனர்.
புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கான ஓட்டுப் பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. 45 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 28ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. 36 மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனு வாபஸ் பெற நேற்று மதியம் 3:00 மணி வரை கெடு கொடுக்கப்பட்டது.
சுயேச்சை வேட்பாளர் பிரவீணா நேற்று மனுவை திரும்ப பெற்றார். இதையடுத்து ஏழு அரசியல் கட்சி வேட்பாளர்கள், 19 சுயேச்சைகள் உட்பட 26 பேர் போட்டியிடுவது உறுதியானது.
தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் லோக்சபா தொகுதியில் 26 பேர் போட்டியிடுகின்றனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முதலில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு தாமரை, காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு கை சின்னம், அ.தி.மு.க., தமிழ்வேந்தனுக்கு இரட்டை இலை, பகுஜன் சமாஜ் கட்சி அலங்காரவேலுக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டது.
பதிவு செய்த அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி நாம் தமிழர் கட்சி மேனகாவுக்கு ஒலி வாங்கி, சோசியலிஸ்ட் யுனிட்டி சென்டர் ஆப் இந்தியா (சுசி கம்யூனிஸ்ட்) கட்சி சங்கரனுக்கு பானை சின்னம், ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி பிரபுதேவனுக்கு காஸ் சிலிண்டர் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. அதையடுத்து 19 சுயேட்சைகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
இனி அனல் பறக்கும்
தமிழகம் முழுதும் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் கூடுதலாக அதிகரித்து வானிலை வறண்டு காணப்படும். அனல் காற்று வீசும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகரித்து வரும் வெயில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்துக்குச் சவாலாகவே உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் காலை நேரத்திலும், பிற்பகலுக்குப் பின் மாலை நேரத்திலும் பிரசாரம் செய்து வருகின்றன. ஆனால் பிரசாரத்தை முடிக்க 18 நாட்களே உள்ளதால் எங்கும் நிற்ககூட வேட்பாளர்களுக்கு நேரம் இருக்காது. இனி களத்தில் பிரசாரம் அனல் பறக்கும்.

