/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி நுகர்வோர் குறைதீர் ஆணையம்; ஓராண்டில் 213 வழக்குகளுக்கு தீர்வு
/
புதுச்சேரி நுகர்வோர் குறைதீர் ஆணையம்; ஓராண்டில் 213 வழக்குகளுக்கு தீர்வு
புதுச்சேரி நுகர்வோர் குறைதீர் ஆணையம்; ஓராண்டில் 213 வழக்குகளுக்கு தீர்வு
புதுச்சேரி நுகர்வோர் குறைதீர் ஆணையம்; ஓராண்டில் 213 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : மார் 28, 2024 04:24 AM

புதுச்சேரி : புதுச்சேரி நுகர்வோர் குறைதீர்வு மாவட்ட ஆணையம் கடந்த ஓராண்டில் 213 வழக்குகளை விசாரித்து, 201 சதவீத உத்தரவுகள் வழங்கி வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மாநில நுகர்வோர் பூசல்கள் குறைதீர்வு ஆணையம் பகுதி நேரமாக செயல்பட்டு வந்தது. கடந்த 2023ம் ஆண்டு பிப்., மாதம் மாவட்ட ஆணையத்திற்கு புதிய தலைவர், உறுப்பினர் நியமித்து முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
புதுச்சேரி மாவட்ட ஆணையம், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்திய நுகர்வோர் வழக்குகளை நேரடியாக சென்று முகாம் மூலம் விசாரணை செய்து வருகிறது.
கடந்த 2023 முதல் 2024 பிப். வரை மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் 106 வழக்குள் பதிவானது. இத்துடன் நிலுவையில் உள்ள வழக்குகளும், புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் அடங்கிய அமர்வு விரைவாக விசாரித்து முடிப்பதிற்கு நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த ஓராண்டில் 106 வழக்குகள் பதிவான நிலையில் கடந்த பிப். வரை 213 வழக்குகளுக்கு மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் தீர்வு காணப்பட்டு உத்தரவு வழங்கி முடித்து வைக்கப்பட்டன. இதன்படி 201 சதவீதம் வழக்குகளை முடித்து உத்தரவு வழங்கி உள்ளது.
தீர்வு காணப்பட்ட 213 வழக்குகளில் 54 வழக்குகள் மக்கள் நீதிமன்றம் மூலமும், பிற 159 வழக்குகள் விசாரணை நடத்தி தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நுகர்வோர் பல்வேறு வழக்குகளில் தீர்வு பெற்றுள்ளனர். சேவை குறைபாடுகள், பொருட்கள் தயாரிப்பில் உள்ள குறைகள், வங்கி சேவை குறைபாடு, காப்பீட்டு வழக்குகள் கையாளப்பட்டு தீர்வு காணப்பட்டு தன்மையை பொறுத்து தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது நுகர்வோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
ஆணைய தலைவர் முத்துவேல் கூறுகையில்; புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 ன்படி நுகர்வோர் வழக்குகளை 90 நாட்களில் முடிக்கவும், நிபுணர்களின் அறிக்கை தேவைப்படும் வழக்குகளை 150 நாட்களில் தீர்த்து வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் நுகர்வோருக்கு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விரைவாக உத்தரவுகள் கிடைக்கும் என கூறினார்.

