/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெரிய முதலியார் சாவடியில் வேழம் இயற்கை அங்காடி திறப்பு
/
பெரிய முதலியார் சாவடியில் வேழம் இயற்கை அங்காடி திறப்பு
பெரிய முதலியார் சாவடியில் வேழம் இயற்கை அங்காடி திறப்பு
பெரிய முதலியார் சாவடியில் வேழம் இயற்கை அங்காடி திறப்பு
ADDED : ஏப் 15, 2024 04:47 AM

புதுச்சேரி : பெரிய முதலியார் சாவடியில், 'வேழம்' இயற்கை அங்காடி திறக்கப்பட்டுள்ளது.
கோட்டக்குப்பம், பெரியமுதலியார் சாவடி, ஆரோவில் சாலையில், ஜீவராசி அறக்கட்டளை அலுவலகத்தில் ' வேழம் ' எனும் பெயரில் இயற்கை அங்காடி நேற்று திறக்கப்பட்டது.
இங்கு பனை ஓலைகளால் செய்யப்பட்ட கைவினை பொருட்கள் உள்ளிட்ட முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்து உரிமையாளர் சரஸ்வதி கூறுகையில், ''இது சுற்றுச்சூழல் பராமரிப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அறக்கட்டளை ஆகும். சுற்றுச்சூழலுக்கு இணக்கமான இயற்கை பொருட்களை ஊக்குவிக்கும் விதமாகவும், அதனை விற்பனை செய்யும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இயற்கை பொருட்களை, விற்பனை செய்யவும் வரவேற்கப்படுகிறது,'' என்றார்.