/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபையில் ரூ.2.5 லட்சத்தில் புதிய தீயணைப்பு கருவிகள்
/
சட்டசபையில் ரூ.2.5 லட்சத்தில் புதிய தீயணைப்பு கருவிகள்
சட்டசபையில் ரூ.2.5 லட்சத்தில் புதிய தீயணைப்பு கருவிகள்
சட்டசபையில் ரூ.2.5 லட்சத்தில் புதிய தீயணைப்பு கருவிகள்
ADDED : ஏப் 26, 2024 05:28 AM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை வளாகத்தில், ரூ.2.5 லட்சம் மதிப்பில், தீயணைப்பு கருவிகள் புதியதாக பொருத்தப்பட்டுள்ளன.
புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் சபாநாயகர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,கள், அதிகாரிகள் அலுவலகங்கள் உள்ளன. இந்த வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும், தீயணைப்பு கருவி புதிதாக நேற்று பொருத்தப்பட்டு, அதற்கான செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.
இந்த கருவி, எளிதாக தீயை அணைக்கக்கூடியது. இதில் பவுடர் இருக்கும். தீயின் மீது அதை செலுத்திய உடன், ஆக்சிஜனை இழுத்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும். சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்த, இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தேனீ ஜெயக்குமார், ராமலிங்கம் எம்.எல்.ஏ., சட்டசபை செயலர் தயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து சபாநாயகர் செல்வம் கூறுகையில், 'புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் தீ விபத்தை தடுக்க, அறிவியல் பூர்வ புதிய முறை வடிவமைப்பு செய்துள்ளோம்.
தீ விபத்தில் இருந்து பாதுகாக்க சட்டசபை முழுக்க தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, சட்டசபை பாதுகாவலர்களுக்கு பயிற்சி தரப்பட உள்ளது' என்றார்.

