/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நில அபகரிப்பு கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேரு எம்.எல்.ஏ., போலீஸ் நிலையம் முற்றுகை
/
நில அபகரிப்பு கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேரு எம்.எல்.ஏ., போலீஸ் நிலையம் முற்றுகை
நில அபகரிப்பு கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேரு எம்.எல்.ஏ., போலீஸ் நிலையம் முற்றுகை
நில அபகரிப்பு கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேரு எம்.எல்.ஏ., போலீஸ் நிலையம் முற்றுகை
ADDED : மார் 28, 2024 04:30 AM
புதுச்சேரி : பெரியமார்க்கெட் வியாபாரி தற்கொலைக்கு காரணமான நில அபகரிப்பு கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேரு எம்.எல்.ஏ., பெரியக்கடை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
கோவிந்தசாலை ஒத்தவாடை வீதியைச் சேர்ந்தவர் முகமது அய்யுப், 58; பெரிய மார்க்கெட்டில், வாடகை கடையில் மளிகை வியாபாரம் செய்து வந்தார். கடையின் உரிமையாளர் மீர் சுல்தான் மைதீன் இறந்து விட்டார். அவரது உறவினர்கள் வாடகை வாங்கி வந்தனர்.
கடந்த 3 மாதங்களாக முகமது அய்யுப்பால் வாடகை கொடுக்க முடியவில்லை. வாடகை சம்பந்தமாக பேச கடை உரிமையாளரின் உறவினர் சிலர் கடந்த 7 ம் தேதி முகமது அய்யுப்புடன் பேசினர்.3 நாட்களில் வாடகை கொடுக்கவில்லை என்றால் கடையை காலி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
இதனை கேட்டு வீட்டிற்கு வந்த முகமது அய்யுப் வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், முகமது அய்யுப் நடத்தி வந்த கடை வாரிசு இல்லாத சொத்து என்பதால், நில அபகரிக்கும் கும்பல் கடையை காலி செய்யுமாறு மிரட்டல் விடுத்ததாகவும், மிரட்டல் காரணமாக முகமது அய்யுப் தற்கொலை செய்து கொண்டார் என உறவினர்கள், பெரியமார்க்கெட் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், போலீசார் தற்கொலை வழக்கு மட்டும் பதிவு செய்து, தற்கொலைக்கு துண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேரு எம்.எல்.ஏ., தலைமையில் சமூக அமைப்பினர் பெரியக்கடை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று நேரு எம்.எல்.ஏ., மற்றும் பல்வேறு அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

