ADDED : ஏப் 03, 2024 07:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி தேசிய அரிமா சங்க மாவட்ட மாநாட்டில் சிறப்பாக பரதநாட்டியம் ஆடிய மாணவிக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி தேசிய அரிமா சங்கத்தின் மாவட்ட மாநாடு, மரப்பாலம் சுகன்யா கன்வென்ஷன் செண்டரில் நடந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு கலைஞர்கள் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பரத நாட்டியத்தில் சிறப்பாக ஆடிய, சென்னையை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி தன்வஸ்ரீ என்பவரை அரிமா சங்க மாவட்ட கவர்னர் கோபிகிருஷ்ணா பாராட்டி, பரிசு வழங்கினார். சிறப்பு விருந்தினராக மதனகோபால், நல்லி குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அரிமா சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

