/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிக்னல்களில் பசுமை பந்தல் சுகாதார ஊழியர் சங்கம் மனு
/
சிக்னல்களில் பசுமை பந்தல் சுகாதார ஊழியர் சங்கம் மனு
சிக்னல்களில் பசுமை பந்தல் சுகாதார ஊழியர் சங்கம் மனு
சிக்னல்களில் பசுமை பந்தல் சுகாதார ஊழியர் சங்கம் மனு
ADDED : ஏப் 03, 2024 03:20 AM
புதுச்சேரி :புதுச்சேரியில் கோடை வெப்பத்தில் இருந்து வாகன ஓட்டிகளை காக்க போக்குவரத்து சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க, சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ஜவஹர், கலெக்டரிடம் அளித்துள்ள மனு;
புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெயில் கொடுமையால் முதியவர்கள் மற்றும் மகளிருக்கு, உடலில் நீர்ச்சத்து இழப்பு அதிகரித்து, 'ஹீட் ஸ்ட்ரோக்' எனும் உடல்நல பாதிப்பும், சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. சமீபத்தில் சுகாதாரத்துறை சார்பில் கோடை காலத்தை கையாளக் கூடிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
கோடை காலங்களில் அரசியல் பிரமுகர்கள், பொது நல அமைப்புகளை சேர்ந்தவர்கள் போக்குவரத்து சிக்னல்களில் பசுமை பந்தல் அமைத்து வாகன ஓட்டிகளை வெயிலின் தாக்கத்தில் இருந்து காக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர். தற்போது தேர்தல் காலம் என்பதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அவர்களால் இந்த பணியை மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது.
எனவே, அரசு சார்பில் போக்குவரத்து சிக்னல்களில் பசுமை பந்தல் அமைத்து வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் வெயிலின் தாக்கத்தால் இருந்து காக்க வேண்டும். அரசியல் சார்பற்ற பொதுநல அமைப்புகள் சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்கவேண்டும்.

