/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகளை காணவில்லை தந்தை போலீசில் புகார்
/
மகளை காணவில்லை தந்தை போலீசில் புகார்
ADDED : ஏப் 23, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார், : சோரப்பட்டில் கல்லுாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு தென்னஞ்சாலை வீதியை சேர்ந்தவர் மோகன், 58; கூலி தொழிலாளி. இவரது மகள் காயத்ரி, 18; மதர் தெரசா கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 20ம் தேதி காலை 6:00 மணிக்கு கல்லுாரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து மோகன் அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து காயத்ரியை தேடி வருகின்றனர்.

