ADDED : மே 16, 2024 10:50 PM
பாகூர்: விபத்தில் காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடுவீரப்பட்டு, கீழச்செட்டி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம், 61; விவசாயி. இவர், அதே பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி 49; என்பவருடன் கடந்த 13ம் தேதி பைக்கில் (டி.என். 22 பிஎல் 6557) புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பைக்கை, கலியமூர்த்தி ஓட்டிச் சென்றார். கிருமாம்பாக்கம் அருகே சென்ற போது, ஆக்டிவா ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற நபர் முந்தி செல்ல முயன்றார்.
அப்போது, ஆக்டிவா ஸ்கூட்டர் உரசியதால், நிலை தடுமாறி ராமலிங்கமும், கலியமூர்த்தியும் கீழே விழுந்து காயமடைந்தனர். இருவரும் பிள்ளையார்குப்பம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

