
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கலால் விதியை மீறி விற்பனை செய்யப்பட்ட பனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. பாகூர் உதவி சப் இன்ஸ்பெக்டர் சிவா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சேலியமேடு பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு பனைமரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. கலால் விதியை மீறி செயல் என கூறி விற்பனை செய்யப்பட்ட 10 லிட்டர் கள்ளை போலீசாரால் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், பரிக்கல்பட்டு ஏரிக்கரை பகுதியில் 10 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

