/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து மாகியில் முதல்வர் ரங்கசாமி ஓட்டு சேகரிப்பு
/
பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து மாகியில் முதல்வர் ரங்கசாமி ஓட்டு சேகரிப்பு
பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து மாகியில் முதல்வர் ரங்கசாமி ஓட்டு சேகரிப்பு
பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து மாகியில் முதல்வர் ரங்கசாமி ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 06, 2024 05:37 AM

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் ஆகியோர் மாகி பிராந்தியத்தில் தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.
புதுச்சேரி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம், முதல்வர் ரங்கசாமி நேற்று மாகி பிராந்தியத்தில் வீதி வீதியாக திறந்த வேனில் சென்று ஓட்டு சேகரித்தனர். அவர்களுக்கு என்.ஆர்.காங்., - பா.ஜ., நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். ராமலிங்கம் எம்.எல்.ஏ., வும் தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம் பேசுகையில், 'நான் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டால் புதுச்சேரி மாநிலத்துக்கு தேவையான நிதியை கொண்டு வருவேன். நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்ப்பது, அரசு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்வதுடன், பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன்.
மத்திய அரசின் திட்டங்களை சரியான நேரத்தில் கொண்டுவந்து புதுச்சேரிக்கு வளர்ச்சியை உருவாக்க பாடுபடுவேன். வரும் தேர்தல் வித்தியாசமான தேர்தல். பிரதமரை தேர்வு செய்யத்தான் தேர்தல் நடத்தப்படும். ஆனால் பிரதமரை தேர்வு செய்துவிட்டு நாம் தேர்தலை சந்திக்கிறோம்.
பிரதமராக மோடி வர வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர். மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி நடந்தால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும். புதுச்சேரி சிங்கப்பூராக மாற வேண்டும் என்பது கனவாகவே உள்ளது. இந்த கனவு நிறைவேற வேண்டும். மத்திய அரசோடு இணக்கமாக அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து புதுச்சேரியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன்' என்றார்.

