/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கம்
/
தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கம்
ADDED : ஏப் 04, 2024 01:12 AM

புதுச்சேரி: புதுச்சேரி, மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில், இந்திய குடிமைப் பொறியாளர்கள் கலந்தாய்வு கூட்டமைப்பு சார்பில், 'நிர்மாணிக்கா-24' கட்டடவியல் துறையில் சிறந்து விளங்குவதற்கான தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது.
மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் வெங்கடாசலபதி வரவேற்றார்.
இந்திய குடிமைப் பொறியாளர்கள் கலந்தாய்வு கூட்டமைப்பு புதுச்சேரி சேர்மன்முருகன் நோக்க உரையாற்றினார்.
கருத்தரங்கில் பெங்களூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் இயக்குனர் அஷ்வத், கட்டடவியல் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் உயர்நிலைக்கு செல்லக் கூடிய யுக்திகள் குறித்தும்,திறன் மேம்பாட்டை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகளை குறித்தும் பேசினார்.
புதுச்சேரி ஜூனியர் டவுன் பிளானர்விஜயநேரு, மாணவர்கள் கட்டடவியல் துறைச் சார்ந்த படிப்பை தேர்ந்தெடுத்தமைக்காக பெருமை கொள்ள வேண்டும்.
கட்டடவியல் துறையில் உள்ள வளர்ச்சிகளை அறிந்து அதன் பயன்பாட்டை உறுதி செய்வதில் கவனம் செலுத்த அறிவுறித்தினார்.
கருத்தரங்கில் கல்லுாரி அனைத்துத் துறை டீன்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கட்டடவியல் துறை சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜெயக்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கட்டடவியல் துறைத் தலைவர் சுந்தரராமன் மற்றும் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

