/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோர்ட் பணியில் விலகி இருக்க வழக்கறிஞர் சங்கம் முடிவு
/
கோர்ட் பணியில் விலகி இருக்க வழக்கறிஞர் சங்கம் முடிவு
கோர்ட் பணியில் விலகி இருக்க வழக்கறிஞர் சங்கம் முடிவு
கோர்ட் பணியில் விலகி இருக்க வழக்கறிஞர் சங்கம் முடிவு
ADDED : ஏப் 05, 2024 05:37 AM
புதுச்சேரி: இ-பில்லிங் முறையில் வழக்குகள் தாக்கல் செய்வதை ஒத்தி வைக்க வலியுறுத்தி, இரண்டு நாள் கோர்ட் பணியில் இருந்து விலகி இருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இ-பில்லிங் முறையில் வழக்குகளை தாக்கல் செய்வதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், அந்த முறையில் வழக்குகள் தாக்கல் செய்வதை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (5ம் தேதி) மற்றும் நாளை (6ம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள் கோர்ட் பணியில் இருந்து விலகி இருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகையால், இரண்டு நாட்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கோர்ட் செல்லாமல் பணியில் இருந்து விலகி இருக்குமாறு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.