/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத்திறனாளிகள் பணியாற்றிய ஓட்டுச் சாவடி
/
மாற்றுத்திறனாளிகள் பணியாற்றிய ஓட்டுச் சாவடி
ADDED : ஏப் 20, 2024 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகள் முதல் முறையாக பணியாற்றிய ஓட்டுச் சாவடி இயங்கியது.
புதுச்சேரி, சாரம் வெங்கடேஸ்வரா நகர் ஒன்பதாவது குறுக்குத் தெருவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில், 10/17 ஓட்டுச் சாவடி லோக்சபா தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருந்தது. 584 பெண்கள் மற்றும் 574 ஆண்கள் உள்பட மொத்தம் 1,158 வாக்காளர்களைக் கொண்ட இந்த ஓட்டு சாவடியில் முழுக்க முழுக்க மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பணியாற்றினார்.
பரிச்சார்த்த முறையில் செயல்படுத்தப்பட்ட இந்த ஓட்டுச் சாவடி சிறப்பாக செயல்பட்டதாக வாக்காளர்கள் கூறினர்.

