/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிநீர் குழாயில் உடைப்பு தண்ணீர் வீணாகும் அவலம்
/
குடிநீர் குழாயில் உடைப்பு தண்ணீர் வீணாகும் அவலம்
ADDED : ஏப் 24, 2024 08:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வேல்ராம்பட்டு சாலையில், குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்வதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரப்பாலத்தில் இருந்து, வேல்ராம்பட்டு ஏரிக்கரை செல்லும் சாலை உள்ளது. இங்கு, கடந்த 4 நாட்களுக்கு முன்பு, வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால், தண்ணீர் சாலையில் வீணாக ஓடுகிறது. இதனால் பொதுமக்களும், கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும், அவதிப்பட்டு வருகின்றனர்.
உடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள், பொதுப்பணித்துறையினருக்கு புகார் செய்துள்ளனர்.

