/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அய்யனாரப்பன் கோவிலில் 32ம் ஆண்டு சித்திரை திருவிழா
/
அய்யனாரப்பன் கோவிலில் 32ம் ஆண்டு சித்திரை திருவிழா
அய்யனாரப்பன் கோவிலில் 32ம் ஆண்டு சித்திரை திருவிழா
அய்யனாரப்பன் கோவிலில் 32ம் ஆண்டு சித்திரை திருவிழா
ADDED : ஏப் 23, 2024 05:10 AM

நெட்டப்பாக்கம் : மொளப்பாக்கம்-குச்சிப்பாளையம் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் 32ம் ஆண்டு சித்திரை திருவிழா நேற்று நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த மொளப்பாக்கம்- குச்சிப்பாளையம் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன், பூரணி-பொற்கலை, கோவிலில் உள்ள விநாயகர், முருகன், சிவ துர்க்கை அம்மன் கோவில்களில் 32ம் ஆண்டு சித்திரை திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 9.00 மணிக்கு அய்யனாரப்பனுக்கு பூங்கரகம் எடுத்தல், மாலை 4.00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தல், இரவு 7.00 மணிக்கு மகா தீபாரதனை நந்தது.
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் துணை சபாநாயகர் ராஜவேலு உள்ளிட் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இரவு 9 மணிக்கு மகா கணபதி, பூரணி, பொற்கலை-அய்யனாரப்பன், முருகன் வள்ளி தெய்வானை, சிவதுர்கை அம்மன் சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை மொளப்பாக்கம்-குச்சிப்பாளையம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

