/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுப் பதிவு 30 நிமிடம் தாமதம்
/
ஓட்டுப் பதிவு 30 நிமிடம் தாமதம்
ADDED : ஏப் 20, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர், : பிள்ளையார்குப்பம் ஓட்டுச் சாவடியில், இயந்திரம் பழுதானதால் 30 நிமிடம் ஓட்டு பதிவு தடைபட்டது.
ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்குப்பம் அரசு தொடக்கப் பள்ளி மையத்தில் நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது.
வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டு வந்தனர். மதியம் 1:30 மணியளவில் ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. பின்னர் மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டு, ஓட்டுப் பதிவு மீண்டும் துவங்கியது. இதனால், 30 நிமிடம் ஓட்டுப் பதிவு தடைபட்டது.

