புதிய வாக்காளர்களை சேர்க்க கல்லுாரிகளில் சிறப்பு ஏற்பாடு
புதிய வாக்காளர்களை சேர்க்க கல்லுாரிகளில் சிறப்பு ஏற்பாடு
UPDATED : டிச 23, 2025 07:14 AM
ADDED : டிச 23, 2025 07:14 AM

ஈரோடு:
வாக்காளர் சிறப்பு திருத்த பணி முடிந்து, கடந்த, 19ல் வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகத்தில் வெளியிடப்பட்டது.
பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் உடனடியாக பெயர் சேர்த்தலுக்குரிய விண்ணப்பத்தை ஒரு மாதத்துக்குள் வழங்க தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கல்லுாரிகளில் பயிலும், 18 வயது பூர்த்தியான மாணவ, மாணவிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபற்றி வருவாய் துறையினர் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து கல்லுாரிகளிலும் ஒரு துாதுவர் நியமிக்கப்படுவார். இவர் அந்தந்த கல்லுாரிகளை சேர்ந்தவராக இருக்க வேண்டும். கல்லுாரியில் 18 வயது பூர்த்தியான மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களிடம் படிவம்-6ஐ வழங்குவார். அவர்கள் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இப்பணி ஜன.18 வரை தொடரும். வரும் 27, 28ல் அந்தந்த ஓட்டுசாவடி மையங்களில் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடக்கிறது.
இவ்வாறு கூறினர்.

