ஐ.டி., நிறுவனம் வருவதால் புதுச்சேரி வளர்ச்சி அடையும் :அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
ஐ.டி., நிறுவனம் வருவதால் புதுச்சேரி வளர்ச்சி அடையும் :அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
UPDATED : டிச 23, 2025 07:14 AM
ADDED : டிச 23, 2025 07:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:
நம்ம புதுச்சேரி அமைப்பின் சார்பில், பழைய துறைமுக வளாகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை செய்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், 'புதுச்சேரி அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது.
இங்கு படிக்கும் மாணவர்கள் வெளி மாநிலங்களில் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. அவர்களுக்கு நமது மாநிலத்தில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு உள்ளது.
படித்த இளைஞர்கள் அனைவருக்கும் ஐ.டி., வேலைக்கு செல்ல வேண்டும் என்பதில் ஆசை உள்ளது. புதுச்சேரியில் ஸோகோ நிறுவனம் வர உள்ளதால், இதன் மூலம் வேலை வாய்ப்பு மட்டுமின்றி, மாநிலமும் வளர்ச்சி அடையும்' என்றார்.

