தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/முழுவடிவம் பெறும் ஆன்லைன் வழி கல்வி!

முழுவடிவம் பெறும் ஆன்லைன் வழி கல்வி!

முழுவடிவம் பெறும் ஆன்லைன் வழி கல்வி!


ஜூலை 18, 2020 12:00 AM

ஜூலை 18, 2020 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 18, 2020 12:00 AM ஜூலை 18, 2020 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேராசிரியர்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து வரும் இன்றைய சூழலில், பல கல்வி நிறுவனங்கள் டிஜிட்டல் வழி கற்பித்தலை முழுமையாக பயன்படுத்த துவங்கியுள்ளன. கொரோனாவுக்கு முன், 20 சதவீதம் என்று இருந்த டிஜிட்டல் வழி கல்வி தற்போது 100 சதவீதமாக உள்ளது. 
இந்த வரிசையில் எங்கள் கல்லூரியும், மாணவர்களுக்கு முழு அளவில் தொழில்நுட்ப உதவியுடன் கல்வியை வழங்கி வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் அதிநவீன கேமராக்கள் மூலம் பேராசிரியர்கள், ஆன்லைனில் பாடம் நடத்துகின்றனர். டிஜிட்டல் முறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் பேராசிரியர்கள் முதலில் தயார்படுத்த, அவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப கல்வி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு புத்துணர்வு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. 

பிரத்யேக ’சாப்ட்வேர்’

ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதில் இருக்கும் சில சிரமங்களை போக்க, பிரத்யேக சாப்ட்வேர் தயாரித்துள்ளோம். மாணவர்களை வகுப்புகளில் அமர வைப்பது போல், ஆன்லைன் வழியில் இல்லை என்றாலும், அவர்களது கவனத்தை ஈர்க்க, 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கேள்வி–பதில் போட்டி நடத்தப்படும். இதன்மூலம் மாணவர்கள் வகுப்பை இடைவிடாது கவனிப்பதை உறுதி செய்யலாம்.
மாணவர்களுக்கு தரமான கல்வியை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால், ஆன்லைன் வாயிலாகவே 'இன்டர்னல்’ தேர்வையும் நடத்தி முடித்துள்ளோம். இதில், 92 சதவீத மாணவர்கள் பங்கேற்றது குறிப்பிட்டத்தக்கது. நேரடி தேர்வுகளில், பொதுவாக 88 முதல் 90 சதவீத மாணவர்கள் பங்கேற்று வந்தனர். இப்போது ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட தேர்வில், 92 சதவீதம் பேர் பங்கேற்று உள்ளனர். மீதமுள்ள, 8 சதவீதம் பேர் இணையதள வசதி குறைபாடு போன்ற காரணங்களால் பங்கேற்க முடியவில்லை எனினும், அவர்களை மதிப்பீடு செய்யவும் ஆன்லைன் தேர்வு நடத்தப்பட உள்ளது. 
ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகளை நடத்துதல், வினாக்களை உருவாக்குதல், மாணவர்களை மதிப்பீடு செய்தல், டிஜிட்டல் முறையில் செய்முறை வகுப்புகளை நடத்துதல் ஆகிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் வரும் ஆண்டுகளில் செயல்வடிவம் பெறும்.
- மதன் செந்தில், தலைவர், ரத்தினம் கல்வி நிறுவனங்கள், கோவை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us