/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
'வாழ்விற்காகத்தான் கல்வி; வெறும் வாழ்வாதாரத்திற்கு அல்ல'
/
'வாழ்விற்காகத்தான் கல்வி; வெறும் வாழ்வாதாரத்திற்கு அல்ல'
'வாழ்விற்காகத்தான் கல்வி; வெறும் வாழ்வாதாரத்திற்கு அல்ல'
'வாழ்விற்காகத்தான் கல்வி; வெறும் வாழ்வாதாரத்திற்கு அல்ல'
ஜூலை 30, 2025 12:00 AM
ஜூலை 30, 2025 12:00 AM

ஸ்ரீ சத்யசாயி பாபாவினால் கடந்த 1981ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஸ்ரீ சத்ய சாய் உயர்கல்வி நிறுவனம், பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் தன்னாட்சி பல்கலைக்கழகம். ஒழுக்கம், பண்பாடு, பணிவு, பரிவு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கல்வியை வழங்குவதே இக்கல்வி நிறுவனத்தின் பிரதான நோக்கம்.
பாரம்பரிய இந்தியக் கல்வி முறையுடன், இன்றைய காலத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கல்வி திட்டம் இங்கு வழங்கப்படுகிறது. அறிவு (தலை), கருணை (இதயம் ) மற்றும் திறமைகள் (கைகள்) ஆகிய மூன்றின் சரியான சமநிலையுடன் பொறுப்பான குடிமக்களை இந்நிறுவனம் வடிவமைக்கிறது.
கல்வி ஒரு வணிகத் துறையாகவும், பணம் சம்பாதிக்கும் வாய்ப்பாகவும் மாறிவரும் இன்றைய காலக்கட்டத்தில், ஸ்ரீ சத்யசாயி பாபாவின் கல்வித் தத்துவம், அதற்கு மாறாக ஒரு முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குவதோடு, 'அனைவருக்கும் இலவச கல்வி வழங்குவது சாத்தியம்' என்பதையும் உலகிற்கு நிரூபித்துள்ளது.
'கல்வியின் இலக்கு நல்லொழுக்கம்' மற்றும் 'வாழ்விற்காகத்தான் கல்வி; வெறும் வாழ்வாதாரத்திற்கல்ல' என்ற அவரது உபதேசங்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உயர்கல்வியின் மகத்தான முயற்சியில் வழிநடத்தும் வழிகாட்டுதலாக உள்ளன. பள்ளி கல்வி முதல் ஆராய்ச்சி வரை ஸ்ரீ சத்யசாய் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும், அனைத்து மாணவர்களுக்கும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
உலக தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களை சிறந்த மனிதர்களாக மட்டுமின்றி, சமுதாயத்தின் சேவையாளர்களாகவும் உருவாக்குகிறது. சாதாரண பல்கலைக் கழகங்களிலிருந்து வெகுவாக மாறுபட்ட இதன் கல்விமுறை, மாணவர்களை ஒழுக்கத்துடன் வளர்த்து, அவர்களை சமூகத்தின் முன்னணி தலைவர்களாக மாற்ற உதவுகிறது.
சமூகத்தில் உள்ள ஏழை வர்க்கத்தினர் மற்றும் தேவையுடைய அனைவருக்கும் சேவை செய்வதை ஒரு கடமையாக மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. மருத்துவ முகாம்கள், கிராம சேவை போன்ற பல சேவைகள் மாணவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. சர்வதேச அளவிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளில் மாணவ, மாணவியினர் ஈடுபடும் வகையில், நவீன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகளை பங்கெடுக்க ஊக்குவித்து, ஒரு முழுமையான மனிதர்களாகவும் மாற்றுகிறது.
ஸ்ரீ சத்யசாயி உயர்கல்வி நிறுவனம் ஒரு சாதாரண பல்கலைக்கழகம் அல்ல; இது
அறிவியல், ஆன்மிகம், ஒழுக்கம் மற்றும் சமூக சேவை ஆகியவற்றின் அடிப்படையில்
உயர்கல்வியை வழங்கும் ஒரு தனித்துவமான கல்வி மையம். உயர்ந்த
மனப்போக்குடனும், சமூக சேவையில் ஈடுபடும் மகிழ்ச்சியுடனும், வாழ்க்கையை
முன்னெடுக்கும் வழிமுறையை வழங்குகிறது.
பல்கலைக்கழக வளாகங்கள்:
பல்கலைக்கழகம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. இதில் பல வளாகங்கள் இயங்குகின்றன.
பிரசாந்தி நிலையம் வளாகம் - இது பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகமாகும்.
அனந்தபூர் வளாகம் - பெண்களுக்கான தனிப்பட்ட வளாகம்.
பிருந்தாவன் வளாகம்
நந்திகிரி வளாகம்
வழங்கப்படும் படிப்புகள்:
பி.எஸ்சி., - மணிவியல், கணிதம், வேதியியல், உயிரியல், பொருளியல்
பி.ஏ., - இலக்கியம், பொருளியல்
பி.காம்., - கணக்கியல், நிதி நிர்வாகம்
பி.பி.ஏ., - வணிக மேலாண்மை
எம்.எஸ்சி., - மணிவியல், கணிதம், வேதியியல், கணினி அறிவியல்
எம்.ஏ.,
எம்.பி.ஏ.,
பி.எட்.,
ஆராய்ச்சி மற்றும் பிஎச்.டி.,
- பேராசிரியர் பி.ராகவேந்திர பிரசாத், துணை வேந்தர், ஸ்ரீ சத்ய சாய் இன்ஸ்டிடியூட் ஆப் ஹயர் லேர்னிங், ஆந்திர பிரதேசம்.