ADDED : மார் 13, 2024 12:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தர கன்னடா : ''நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியது காங்கிரஸ். நான் இருக்கும் வரை அந்த கட்சிக்கு அமைதியை கொடுக்க மாட்டேன்,'' என பா.ஜ., - எம்.பி., அனந்த குமார் ஹெக்டே தெரிவித்தார்.
உத்தர கன்னடாவின் கார்வாரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் நேற்று, அனந்தகுமார் ஹெக்டே, தொண்டர்களுடன் லோக்சபா தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, 'யானை', காங்கிரஸ் எம்.பி., ராகுல் 'ஆடு' போன்றவர்கள். மோடியுடன் ராகுலை ஒப்பிட்டு பேசுவது பெரிய நகைச்சுவை. காங்கிரஸ் தனது மதிப்பை இழந்து விட்டது.
அக்கட்சியில் உள்ள தலைவர்கள், வேட்பாளராக போட்டியிட முன்வருவதில்லை. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியது காங்கிரஸ். நான் இருக்கும் வரை அந்த கட்சிக்கு அமைதியை கொடுக்க மாட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

