ரூ.2.30 லட்சம் கோடி திட்டம் துவக்கம்: மோடியின் வியூகம் என்ன?
ரூ.2.30 லட்சம் கோடி திட்டம் துவக்கம்: மோடியின் வியூகம் என்ன?
ADDED : மார் 11, 2024 10:58 PM

கடந்த
ஒரு மாதமாக நாடு முழுதும் பயணம் செய்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள
திட்டங்களை துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
நாட்டியும் வருகிறார் பிரதமர் மோடி.
லோக்சபா தேர்தல்
எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில்,
இவ்வாறு திட்டங்கள் அறிவிக்கப்படுவதற்கு தேர்தல் மட்டும்
காரணமல்ல. ஆனால், தேர்தலும் ஒரு காரணம்.ஹரியானாவின்
குருகிராமில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 1 லட்சம் கோடி ரூபாய்
மதிப்புள்ள, 112 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர
மோடி அடிக்கல் நாட்டினார்.
லோக்சபாவுக்கு தேர்தல் விரைவில்
நடக்க உள்ள நிலையில், கட்சிகளில் இருந்து பல தலைகள் வேறு கட்சிக்கு
மாறுவதுபோல், பிரதமர் மோடி விளம்பரம் தேடிக் கொள்ள திட்டங்களை
அறிவித்து வருகிறார் என்ற விமர்சனம் எதிர்க்கட்சிகளால் முன்
வைக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்தில், பல மாநிலங்களுக்கு
பயணம் செய்து, பல திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.
புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இவ்வாறு, 2.30
லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை அவர் துவக்கி
வைத்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், தேர்தல் நடத்தை
விதிமுறைகள் அமலாகிவிடும். அதன்பின், புதிய திட்டங்களை அறிவிக்க
முடியாது.
இதையடுத்து, நெடுஞ்சாலைகள், ரயில்வே, மின்
உற்பத்தி, துறைமுகங்கள் மேம்பாடு, விமான நிலையங்கள், என, பல
துறைகளில் புதிய திட்டங்களை மோடி அறிவித்து, அவற்றை துவக்கி வைத்து
வருகிறார்.
'உட்கட்டமைப்பு வசதிகளே, நாட்டின் வளர்ச்சிக்கு
அடிப்படையாகும். 2047ல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க, இந்த வசதிகளில்
இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும்,' என, சமீபத்தில் நடந்த ஒரு
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பிரதமர்
அறிவித்துள்ள இந்த திட்டங்கள், நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியை
ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. வேலைவாய்ப்புகளை
உருவாக்குவதுடன், நாடு முழுதும் வர்த்தகம் விரிவடையும்.
மூன்றாவது
முறையாக ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் பா.ஜ., மற்றும் பிரதமர்
மோடி, அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்கு தேர்தல் நடைமுறைகளில்
கவனம்
செலுத்த வேண்டியிருக்கும். அவ்வாறு அதில் கவனம் செலுத்தினாலும்,
வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதில் மோடிஉறுதியாக
உள்ளார்.
இதனால்தான், தற்போது அதிகளவில்வளர்ச்சி பணிகள்
அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் ஒரு நோக்கமாக இருந்தாலும்,
நாட்டின் வளர்ச்சி என்பதே அடிப்படை இலக்காகும்.இந்த திட்டங்கள்
அறிவிப்பின் வாயிலாக, நவீன இந்தியாவை வடிவமைப்பதில் அவர்
காட்டும் முனைப்பு, அக்கறை, முன்முயற்சி, நம்பிக்கை ஆகியவை வெளிபடு
கின்றன என, கட்சி
மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.
கடந்த,
2019ல் லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவும், பிரதமர் மோடி, 157
திட்டங்களை அறிவித்தார். அவற்றில் பெரும்பாலானவை முடிந்து, திறந்து
வைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் உட்கட்டமைப்புகளுக்காக, 2024
முதல் 2030ம் ஆண்டுக்குள், 143 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய மோடி
அரசு ஏற்கனவே திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதிதான், தற்போது
அறிவிக்கப் பட்டுள்ள திட்டங்கள். - நமது சிறப்பு நிருபர் -

