ADDED : ஆக 26, 2025 03:27 AM
ஆமதாபாத் : குஜராத்தின் ஆமதாபாதில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் வளர்ச்சித் திட்டங்களை துவங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
மற்ற நாடுகளில் இருந்து பொருட்களின் இறக்குமதியை சார்ந்திருந்த நாம், தற்போது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். நம் பொருட்களுக்கு பல நாடுகளில் மவுசு ஏற்பட்டுள்ளது.
என்னை பொறுத்தவரை, விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், சிறு தொழில்களின் நலனே முக்கியம். இதற்காக நம் நாட்டின் மீது அழுத்தம் அதிகரிக்கலாம். அதை நாங்கள் தாங்கிக் கொள்வோம். நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே நாம் பயன்படுத்த வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
'உள்ளூர் பொருட்களையே விற்பனை செய்கிறோம்' என்ற பெரிய பலகையை, தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு வெளியே வைக்க வேண்டும். கடைக்காரர்கள், வணிகர்கள், வியாபாரிகள் என அனைவருமே உள்ளூர் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.