காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
UPDATED : ஜூலை 30, 2025 06:29 PM
ADDED : ஜூலை 30, 2025 09:01 AM

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் ஊடுருவலை கண்டறிந்தனர். அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது: பூஞ்ச் பகுதியில் ஊடுருவல் முயற்சியை முறியடித்த போது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சில தினங்களுக்கு முன், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் உட்பட பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து, துப்பாக்கிகள், வெடிமருந்துகளுடன் கூடிய கைத்துப்பாக்கி, கையெறிகுண்டு, ஐஇடி வெடிகுண்டுகள், மருந்துகள், தகவல் தொடர்பு சாதனம் மற்றும் பல தளவாட பொருட்கள் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நீண்டகால தாக்குதலுக்கு தயார்படுத்திக் கொண்டே அவர்கள் வந்துள்ளதாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.