sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போபால் கார்பைடு தொழிற்சாலையின் நச்சுக்கழிவுகள் முழுமையாக அழிப்பு

/

போபால் கார்பைடு தொழிற்சாலையின் நச்சுக்கழிவுகள் முழுமையாக அழிப்பு

போபால் கார்பைடு தொழிற்சாலையின் நச்சுக்கழிவுகள் முழுமையாக அழிப்பு

போபால் கார்பைடு தொழிற்சாலையின் நச்சுக்கழிவுகள் முழுமையாக அழிப்பு

1


ADDED : ஜூலை 01, 2025 04:16 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 04:16 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்துார் : மத்திய பிரதேசத்தின் போபாலில், 40 ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய பேரழிவுக்கு காரணமாக இருந்த கார்பைடு தொழிற்சாலையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட, 337 டன் நச்சுக்கழிவுகள் முற்றிலும் எரித்து சாம்பலாக்கப்பட்டன.

மத்திய பிரதேசத்தின் போபாலில், அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் ஆண்டர்சன் என்பவருக்கு சொந்தமான, 'யூனியன் கார்பைடு' எனும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலையில், 1984ம் ஆண்டு டிச., 3ல் 'மீத்தைல் ஐசோ சயனேட்' எனும் நச்சு வாயு கசிந்தது.

337 டன் கழிவுகள்


இந்த விபரீத விபத்தால், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் இந்த வாயு கசிவினால் ஏற்பட்ட பின்விளைவுகளால் இன்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 'போபால் பேரழிவு' என அழைக்கப்படும் இந்த பேரழிவானது, உலகின் தொழிற்சாலை விபத்துகளிலேயே மிக மோசமான பேரழிவாக கருதப்படுகிறது.

இந்த விபத்துக்கு பின், மூடப்பட்ட ஆலையில் இருந்த நச்சுக்கழிவுகளை அகற்ற, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, விபத்து நடந்து, 40 ஆண்டுகளுக்கு பின், யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து, 337 டன் நச்சுக்கழிவுகளை அகற்றும் பணி, இந்தாண்டு ஜன., 1ம் தேதி துவங்கியது.

சீல் செய்யப்பட்ட, 12 கன்டெய்னர் லாரிகளில் இந்த கழிவுகள், போபாலில் இருந்து 250 கி.மீ., தொலைவில் இருக்கும் பிதாம்பூர் தொழிற்பேட்டைக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

பாதிப்பு இல்லை


அங்குள்ள நவீனமயமான ஆலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட, 337 டன் நச்சுக்கழிவுகளில், பல்வேறு கட்ட சோதனைகளின் போது 30 டன் எரிக்கப்பட்டன. மீதமிருந்த 307 டன் நச்சுக்கழிவுகளை எரிக்கும் பணி, மே 5ம் தேதி துவங்கியது. முழு நச்சுக்கழிவுகளும் நேற்று அதிகாலையில் எரித்து முடிக்கப்பட்டன.

இது குறித்து மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பிராந்திய அதிகாரி ஸ்ரீனிவாஸ் திவேதி கூறியதாவது:


மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தொழில்நுட்ப நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ், மணிக்கு அதிகபட்சமாக, 270 கிலோ என்ற விகிதத்தில் நச்சுக்கழிவுகள் எரிக்கப்பட்டன.

கழிவுகளை எரிப்பதால், சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது தொடர்பாக, எந்த புகாரும் பதிவாகவில்லை.

எரிந்த பின் மீதமுள்ள சாம்பல் மற்றும் பிற எச்சங்கள் பாதுகாப்பாக சாக்கு பைகளில் அடைக்கப்பட்டு, ஆலையின் கசிவு தடுப்பு சேமிப்பு கொட்டகையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நிலத்தில் புதைப்பதற்காக சிறப்பு குப்பை கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.

நவம்பர் மாதத்துக்குள் இந்த பணி நிறைவடையும். அனைத்து எச்சங்களும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் அப்புறப்படுத்தப்படும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் வராது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us