ADDED : பிப் 04, 2024 11:25 PM
நான்கு சுவற்றுக்குள் தொப்பி அணிவது, சாலையில் செல்லும் போது திலகமிடுவது என்ற மத சார்பின்மை பேசும் காங்கிரசை இப்போது எங்கும் காணவில்லை. காங்கிரசை கூட்டணி கட்சியினர் மட்டுமின்றி, சொந்த கட்சியினரும் கைவிட்டுவிட்டனர்.
முக்தர் அப்பாஸ் நக்வி, முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,
ஓட்டுகளை அள்ளுவோம்!
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், தலித்துகளில் 91 சதவீதம் பேர் ஒற்றுமையுடன் எங்கள் கூட்டணிக்கு ஓட்டளிப்பர் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆனால் உ.பி.,யில் வேட்பாளர்கள் தேர்விலேயே பா.ஜ., இன்னும் பின்தங்கி உள்ளது.
அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி கட்சி
கோஷ்டி மோதல் துவக்கம்!
மஹாராஷ்டிரா கூட்டணி அரசில் தற்போது கோஷ்டி மோதல் துவங்கி உள்ளது. ஒருவரை ஒருவர் துப்பாக்கியை எடுத்து சுடுகின்றனர். பிற கட்சிகளை உடைத்து, அதன் தலைவர்களை தங்களுடன் சேர்ப்பதால் பா.ஜ., பலவீனமடைவதை பிரதமர் மோடி உணர வேண்டும்.
உத்தவ் தாக்கரே, தலைவர், சிவசேனா உத்தவ், அணி

