ADDED : மார் 15, 2024 10:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவுராத் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரபு சவுஹானுக்கு, உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பீதர், அவுராதின் இல்லத்தில் இருந்தபோது அவர் இதய துடிப்பு சீர்குலைந்தது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்காக, மும்பை, பாந்த்ராவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு ஆப்பரேஷன் நடந்துள்ளது. தற்போது அவர் குணமடைந்து வருவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். சில நாட்கள் ஓய்வு பெற்ற பின், லோக்சபா தேர்தல் பிரசாரம் செய்யக்கூடும்.
- நமது நிருபர் -

