ADDED : செப் 18, 2025 02:39 AM

புதுடில்லி:டில்லியில் பல இடங்களில் நேற்று மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை தொடரும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், டில்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டில்லியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக இருந்தது. பகலில் சில இடங்களில் தூறல் மட்டுமே இருந்தது. ஆனால், மதியம் மழை பெய்தது. சப்தர்ஜங்கில் 4.52 செ.மீ., மழை பெய்துள்ளது. லோதி சாலை - 2.56 செ.மீ., ரிட்ஜ் - 0.42 செ.மீ., மயூர் விஹார் 0.17 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.
கிழக்கு டில்லி, ஷாஹ்தாரா, மத்திய டில்லி, வடக்கு டில்லி, தெற்கு டில்லி மற்றும் மேற்கு டில்லியின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை தொடர வாய்ப்புள்ளதாக கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், டில்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்பநிலை நேற்று 35.3 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இன்றும் டில்லியில் வானம் மேகமூட்டத்துடன் லேசான மழை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.