'ஜம்மு ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடிக்கும்'; புறா மூலம் வந்த மிரட்டல்; உச்சகட்ட அலர்ட்
'ஜம்மு ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடிக்கும்'; புறா மூலம் வந்த மிரட்டல்; உச்சகட்ட அலர்ட்
ADDED : ஆக 21, 2025 12:57 PM

ஜம்மு: ஜம்மு ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு வெடிக்கும் என்று விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்முவில் இருந்து சுமர் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆர்எஸ் புரா பகுதி. இங்கு காலில் சிறு பேப்பரை கட்டியபடி பறந்து வந்த புறாவை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் பிடித்துள்ளனர். அதன் காலில் இருந்த பேப்பரை பிரித்து பார்த்ததில் அதிர்ச்சி காத்திருந்தது.
அதில், 'ஜம்மு ரயில்நிலையத்தில் விரைவில் வெடிகுண்டு வெடிக்கும்,' என்று குறிப்பிட்டிருந்தது. மேலும், 'காஷ்மீர் எங்களுடையது. அதற்கான நேரம் வந்துவிட்டது,' என்று உருது மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஜம்மு ரயில்நிலையம் மற்றும் எல்லைப் பகுதியில் பாதுகாப்புகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எல்லைத் தாண்டி பதற்றத்தை உருவாக்க, பாகிஸ்தான் தரப்பில் திட்டமிட்டே இதுபோன்ற மிரட்டல்களை விடுக்கலாம் என்றும் கூறுகின்றனர்.