இதுபோன்ற பொறுப்பற்ற எதிர்க்கட்சியை இதற்கு முன் பார்த்தது இல்லை: இண்டி கூட்டணியை கண்டித்த மத்திய அமைச்சர்
இதுபோன்ற பொறுப்பற்ற எதிர்க்கட்சியை இதற்கு முன் பார்த்தது இல்லை: இண்டி கூட்டணியை கண்டித்த மத்திய அமைச்சர்
ADDED : ஆக 11, 2025 03:32 PM

புதுடில்லி: இதுபோன்ற பொறுப்பற்ற எதிர்க்கட்சியை நான் பார்த்தது இல்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடு என்ற குற்றச்சாட்டை முன் வைத்து பார்லி. கூட்டத்தொடரில் நடைபெற்று வரும் நிலையில், இன்று, இண்டி கூட்டணிக் கட்சியினர் தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி தடையை மீறி,பேரணி சென்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தவே, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில், எதிர்க்கட்சிகளின் செயல்பாடு பொறுப்பற்றதாக இருப்பதாக மத்திய அரசு கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து பார்லி. விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
இவர்களுக்கு (இண்டி கூட்டணி) அரசியலமைப்பின் மீது நம்பிக்கை இல்லை. எப்படி இருந்தாலும் ஒரு கட்சி, ஒரு குடும்பம் அல்லது தனி நபர் செய்வதை எல்லாம் அரசியலமைப்பாக கருத முடியாது.
நாங்கள் ஜனநாயகத்தை கொண்ட கட்சியில் இருந்து வந்திருக்கிறோம். ஆனால், ஜனநாயக நாட்டில் அவர்கள் அரசியலமைப்பை நம்புவது இல்லை.
இதுபோன்ற பொறுப்பற்ற எதிர்க்கட்சியை நான் பார்த்தது இல்லை. சுப்ரீம்கோர்ட், பார்லிமென்ட் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. நமது அரசியலமைப்பை மட்டுமே விமர்சிக்கிறார்கள்.
தினமும் அவர்கள் ஏன் இந்த நாடகம் ஆடுகின்றனர்? ஏராளமான மசோதாக்கள் பார்லி.யில் பட்டியலிடப்பட்டு உள்ளன. எங்களால் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.
இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.