புதிய வருமான வரி சட்ட மசோதா லோக்சபாவில் நிறைவேறியது!
புதிய வருமான வரி சட்ட மசோதா லோக்சபாவில் நிறைவேறியது!
UPDATED : ஆக 11, 2025 07:10 PM
ADDED : ஆக 11, 2025 03:15 PM

புதுடில்லி: புதிய வருமான வரி மசோதாவை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் இன்று அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து மசோதா நிறைவேற்றப்பட்டது.
பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பழமையான வருமான வரிச்சட்டம், 1961ஐ மாற்றும் அம்சமாக, இந்தாண்டு தொடக்கத்தில் லோக் சபாவில் வருமான வரி மசோதா 2025 அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், இந்த மசோதா மீது பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இது பற்றி டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆக.8 விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில் குழு அமைத்து பரிந்துரைகளை பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பாஜ எம்.பி., பைஜய்ந்த் பாண்டா தலைமையிலான 31 பேர் கொண்ட தேர்வுக்குழு, சட்டத்தில் சில மாற்றங்களை பரிந்துரைத்தது. அவற்றின் அடிப்படையில், திருத்தம் செய்யப்பட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.வருமான வரி சட்டத்தை எளிமைப்படுத்துதல், வரி விகிதங்கள் மற்றும் விலக்குகளில் மாற்றம், வரி தவிர்ப்பைத் தடுக்கும் நடவடிக்கைகள் உள்ளடக்கிய புதிய வருமான வரி சட்ட மசோதாவை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தாக்கல் செய்தார். தொடர்ந்து, விவாதம் எதுவும் இன்றி மசோதா நிறைவேற்றப்பட்டது.