ராஜாஜி நகர் முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் இன்று துவக்கம்
ராஜாஜி நகர் முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் இன்று துவக்கம்
ADDED : மார் 15, 2024 10:46 PM
ராஜாஜிநகர்: ராஜாஜிநகர் பாலதண்டாயுதபாணி கோவிலில் 35வது ஆண்டு, பங்குனி உத்திரம் இன்று துவங்குகிறது.
பெங்களூரு, ராஜாஜிநகர் 5வது பிளாக் 65வது கிராஸ் 10வது 'ஏ' மெயின் ரோட்டில், பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 35வது ஆண்டு திருவிழா இன்று துவங்குகிறது. இன்று மாலை, பால தண்டாயுதபாணிக்கு ஸ்ரீபாலமுருகன் அலங்காரம் செய்யப்படுகிறது.
நாளை சுவாமி மலை முருகன்; 18ம் தேதி வேடன்; 19ம் தேதி விருத்தன்; 20ம் தேதி பழனி சுப்பிரமணிய சுவாமி; 21ம் தேதி சிவ பூஜை; 22ம் தேதி திருப்பரங்குன்ற முருகன்;
23ம் தேதி திருத்தணி முருகன்; 24ம் தேதி பழமுதிர்சோலை அலங்காரம் செய்யப்படுகிறது. 25ம் தேதி காலை 108 கலச பால் அபிஷேகம், ராஜ அலங்காரமும் நடக்கிறது.
மாலை சக்திவேல் புறப்பாடு, மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு மேல் அன்னதானம் வழங்கப்படுகிறது.

